Saturday 26 December 2009

டிரான்ஸ்பரண்ட் ஸ்ரேயா... போர்த்திய மூதாட்டி


கந்தசாமி படத்தை துவங்கிய போது இரண்டு கிராமங்களை தத்தெடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு. அப்படத்தின் 100 வது நாள் விழாவின் போது இந்த இரண்டு, முப்பதானது! விழாவையே தேனிக்கு அருகில் உள்ள அந்த இரண்டு கிராமங்களில்தான் நடத்த வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார் அவர். ஆனால், வானிலை காரணமாக திட்டத்தில் மாற்றம். கிராம மக்களில் சுமார் ஐநூறு பேரை சென்னைக்கே வரவழைத்திருந்தார் தாணு. நடிகர் சங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் திரும்பிய இடத்திலெல்லாம் வேட்டியும், கண்டாங்கி சேலையுமாக நடமாடினார்கள் மக்கள்.

வழக்கமாக திரையுலக பிரபலங்கள்தான் படத்தின் நடித்த நடிகர் நடிகைகளுக்கும், டெக்னீஷியன்களுக்கும் ஷீல்டு கொடுப்பார்கள். இங்கே வித்தியாசம். வந்திருந்த கிராம மக்களே ஷீல்டுகளை வழங்கினார்கள்.

உள்ளேயிருப்பதெல்லாம் வெளியே தெரிகிற மாதிரி புடவை அணிந்து வந்தார் ஸ்ரேயா. காதில் பப்படம் ஆட, கையில் ஒரு கதராடையுடன் வந்த மூதாட்டி ஒருவர், ஸ்ரேயாவை அப்படியே அந்த ஆடையால் போர்த்தினார். (ஹ¨ம், அநீதி பொறுக்காத கிழவி...) கிராம மக்களிடம் தனது அன்பை ரொம்பவே தெரிவித்த ஸ்ரேயா, ஒவ்வொரு முறை அவர்கள் மற்றவர்களுக்கு ஷீல்டு கொடுக்க வரும்போது கூட எழுந்து நின்று போஸ் கொடுத்தது ஆச்சர்யம்.

“இதுதான் சரி. இவங்க கொடுக்கிற ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்தான் லட்சங்களாகவும் கோடிகளாகவும் எங்க பாக்கெட்டுக்கு வருது. நியாயமாக இவங்கதான் ஷீல்டு கொடுக்கணும். இதை செய்த தாணுவுக்கு என் நன்றி” என்றார் பாக்யராஜ். டெக்னீஷியன்களுக்கு மட்டுமல்ல, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவிஐபிகளுக்கும் இந்த கிராம மக்களே பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்கள்.

இந்த விழாவின் நெட் ரிசல்ட்? கந்தசாமியைதான் தத்தெடுத்துக் கொண்டது கிராமம்!

இயக்குனர் ஆகிறார் கவுதமி! பாலசந்தர் நடிக்கும் கமல் படம்


தன்னை ஹீரோவாக்கிய பாலசந்தரை, ஹீரோவாக்க வேண்டும் என்பதுதான் கமலின் நெடுநாளைய கனவு. இதற்காக அவரே ஒரு ஸ்கிரிப்ட் தயாரித்து வைத்திருந்தார். ஆனால் நடிப்பதில் விருப்பம் இல்லாத பாலசந்தர், விலகி விலகி போக கடைசியில் அவரை வேறு சில இயக்குனர்கள் இயக்க ஆரம்பித்தார்கள். ரெட்ட சுழி, முறியடி என்று நடிகராகவும் தனது பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார் இயக்குனர் சிகரம்.

இந்த நேரத்தில் தனது ஸ்கிரிப்டை பாலசந்தருக்கு நினைவூட்டிய கமல், ஹீரோவாக நடித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்த, சம்மதித்துவிட்டதாம் சிங்கம். ஸ்கிரிப்ட் மட்டும்தான் கமல். இயக்கம் கவுதமி என்று முடிவாகியிருக்கிறது. நடிப்பை தாண்டியும் பல்வேறு துறைகளில் பளிச்சிடும் கவுதமி, தனது இயக்குனராகும் லட்சியத்தை இதன் மூலம் அடைந்திருக்கிறார். பாலசந்தருடன் மாதவனும் நடிக்கிறாராம். ஸ்ருதி கமல் இசையமைக்கிறார்.

கவுதமி, ஸ்ருதி என்று கமலும் மினி ராஜேந்தர் ஆகிவிட்டாரோ என்று ஐயுற வைத்தாலும், ஸ்ருதி சுத்தமாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதமே தரலாம். இதெல்லாம் எப்போது நடக்குமாம்? கேஎஸ்.ரவிகுமார் படத்தையடுத்து இந்த படத்தை துவங்கவிருக்கிறார்களாம். மர்மயோகியை மீண்டும் தூசு தட்டியிருக்கிறார் கமல். அதுபற்றிய விபரங்கள் விரைவில்...

தாமதமாகும் கோவா யுவன்சங்கர் ராஜா காரணமா?


பொங்கலுக்கு கோவா இல்லை! கூடவே மேலும் சில இல்லைகள்... விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளையும், அஜீத்தின் அசலும் கூட இல்லை என்கிறது சில நம்பகமான தகவல்கள்!.

கோவா படத்தின் ஆடியோ இம்மாதம் வெளியிடப்படும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் திடீரென்று ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளி போயிருக்கிறது. காரணம், இளைய மேஸ்ட்ரோ யுவன்சங்கர் ராஜாதானாம். பணத்தை செட்டில் செய்தால்தான் டிராக் தருவேன் என்று கூறிவிட்டாராம். இத்தனைக்கும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இவருக்கு சகோதரர். நெருக்கமான உறவுகளில் என்னென்ன வருத்தங்களோ?

இவர் டிராக்கை தருவதற்கு லேட் பண்ணியதால் ஆடியோ உரிமையை வாங்கிய சோனி நிறுவனமும் டிலே செய்துவிட்டார்களாம். யுவன் டிராக் கொடுத்து பத்து நாட்கள் கழித்துதான் எங்களால் சி.டிகளை தர முடியும் என்று கூறிவிட்டார்களாம். இதுபோன்ற சிக்கல்களை தொடர்ந்துதான் ரிலீசே தள்ளிப் போகும் என்கிறார்கள்.

காயத்திலே களிம்பை தடவிய மாதிரி ஒரு ஆறுதல். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வர ஒப்புக் கொண்டிருக்கிறார் ரஜினி. ஆனால் சன் டி.வியில் நேரடி ஒளிபரப்பு செய்தால் போதும் என்று கூறிவிட்டாராம்.

Thursday 24 December 2009

'உன் அகம்' நலம் என்றால் 'தென்னகம்' நலம்தான் தலைவா! -எம்.ஜி.ஆர் நினைவு நாளையட்டி...


உள்ளேயும் வெளியேயும் தங்கமாக மின்னிய தலைவர் எம்ஜிஆர்! இவரது பூர்விகம் கேரளா. பிறந்தது இலங்கையில் உள்ள கண்டி. வளர்ந்தது கும்பகோணம். உலகம் போற்றும் மனிதராக உருவா(க்)கியது சென்னை. அதனால்தானோ என்னவோ தனது பூத உடல் இந்த மண்ணில்தான் அமரத்துவம் அடைய வேண்டும் என்று விரும்பினார். அவருக்கும் சென்னைக்குமான தொடர்பு எத்தகையது? சில சம்பவங்களை மட்டும் சொல்லி முடித்துவிட முடியாது. நமது வாசகர்களுக்காக இங்கே கொஞ்சமே கொஞ்சம்...

ஒத்தவாடை தெரு-

கலைஞரும் எம்ஜிஆரும் நண்பர்களாக நடைபழகிய தெரு இது. இங்குதான் எம்ஜிஆர் வீடும் இருந்தது. கலைஞரையும் தனது பிள்ளையாக பாவித்த புரட்சித்தலைவரின் அம்மா சத்யபாமா இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து தானே சாதத்தை பிசைந்து உருட்டிக் கொடுப்பாராம்.

ராமாவரம் தோட்டம் -

அடிப்படையில் மலையாளிதான் என்றாலும், புரட்சித்தலைவர் விரும்பிக் கொண்டாடியது தமிழர் திருநாளான பொங்கல் திருநாளைதான். இந்த நாளில் திரைத்துறையை சார்ந்த தனது நண்பர்களை அழைத்து இங்குதான் பொங்கலை கோலாகலமாக கொண்டாடுவார்.

அதே மாதிரி புத்தாண்டு தினத்தன்று வருகிற எல்லாருக்கும் தனது கையால் 100 ரூபாய் நோட்டு ஒன்றை வழங்குவாராம். திரையுலகை சார்ந்த எல்லாருமே இந்த நோட்டை வாங்க ராமாவரத்தில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்திருக்கிறார்கள். புரட்சி தலைவர் கையால் வாங்கினால் வருடம் முழுவதும் செழிப்பாக இருக்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி ஒருமுறை வந்த நடிகர் பாலாஜிக்கு ஒரு 100 ரூபாய் தாளுடன், பெட்டி நிறைய கேஷ¨ம் கொடுத்தாராம் எம்.ஜி.ஆர். ஏன்?

எங்கோ ஒரு கிராமம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தாராம் பாலாஜி. அங்கே மொட்டை வெயிலில் காலில் செருப்பு கூட இல்லாமல் யாரோ ஒரு மூதாட்டி சென்று கொண்டிருக்க, இறக்கப்பட்ட பாலாஜி காரை நிறுத்தி ஒரு 100 ரூபாய் கொடுத்தாராம் மூதாட்டிக்கு. இதுபோல நினைத்துப் பார்க்க முடியாத இன்ப அதிர்ச்சியை கொடுக்கிற ஒரே ஜீவன் எம்ஜிஆர்தானே? நீங்க எம்ஜிஆர்தானே? நல்லாயிருக்கணும் தலைவா என்று அந்த மூதாட்டி வாழ்த்தினாராம். இதைதான் பாலாஜி அப்போது எம்ஜிஆரிடம் சொன்னார்.

என் சார்பில் அந்த மூதாட்டிக்கு உதவியதற்காகதான் இந்த பரிசு என்றுதான் ஒரு பெட்டி நிறைய பணம் கொடுத்தாராம் எம்ஜிஆர். (ஆனால் அதை பாலாஜி வாங்கிக் கொள்ளவில்லை)

எம்ஜிஆரை வெறும் நடிகராகதான் பலர் பார்த்தார்கள். ஆனால் அவர் பெரிய படிப்பாளி என்பதை நிரூபித்த இடம் இதே ராமாவரம் தோட்டம்தான். இங்கே அண்டர் கிரவுண்டில் மிக பிரமாண்டமான நு£லகம் அமைத்திருந்தார் எம்ஜிஆர். இந்த நு£லகத்தை பார்த்து வியந்த அறிவாளிகளில் இன்றைய முதல்வர் கருணாநிதியும் ஒருவர்.

மவுண்ட் ரோடு-

தமிழக முதல்வர்கள் யாருமே மக்கள் முன் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதில்லை. அந்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டும்தான். முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இதே மவுண்ட் ரோடில் அண்ணாசிலைக்கு அருகே பிரமாண்டமான மேடை அமைத்து பொதுமக்கள் முன்னிலையில்தான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் புரட்சித்தலைவர்.

லாயிட்ஸ் சாலை-

இன்றைய அதிமுக வின் தலைமை அலுவலகம் இருக்கிறதே, அது ஒரு காலத்தில் எம்ஜிஆர் வாழ்ந்த வீடு. அவர் திரைத்துறையில் சம்பாதித்து வாங்கிய முதல் சொத்தும் இதுதான். இவர் வாங்கி வைத்திருக்கும் மற்ற பங்களாக்களில் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் எம்ஜிஆர், இங்கு மட்டும் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுவார். ஏனென்றால் இந்த மண் அவரை பொறுத்தவரை ரொம்பவே ஸ்பெஷலானது.

தி.நகர் ஆற்காடு தெரு-

தனது முக்கியமான முடிவுகளை அவர் இங்குதான் எடுப்பார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஜெயலலிதாவை நடிக்க வைக்க முயன்றார் எம்ஜிஆர். ஆனால் அப்போது உடனிருந்த ஆர்.எம்.வீரப்பன் அதற்கு சம்மதிக்கவில்லை. அதில் நடிக்கவில்லை என்றாலும், நட்பை தொடர்ந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் திடீரென்று என்ன காரணத்தினாலோ ஜெயலலிதாவுக்கும், எம்ஜிஆருக்குமான தொடர்பு விட்டு போயிருந்தது. முதல்வர் ஆன பின்பு ஒரு விழாவில் கலந்து கொள்ள சென்ற எம்ஜிஆர், அங்கு வாசலில் நின்று வரவேற்பளித்துக் கொண்டிருந்த ஜெ.வை சந்தித்தார். தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டு நேரம் ஒதுக்கிக் கொடுத்த இடம் இதே ஆற்காட் தெரு அலுவலகத்தில்தான். பின்பு முதல்வர் ஆன பின்பும் அரசு சார்ந்த சில முக்கிய முடிவுகளை ஜெ.வுடன் கலந்தாலோசித்ததும் இதே இடத்தில்தான்.

அடையார் சத்யா ஸ்டுடியோ-

தனது அன்னையார் சத்யபாமா அம்மையார் பெயரில் எம்ஜிஆரால் நிறுவப்பட்ட ஸ்டுடியோ இது. திமுக விலிருந்து நீக்கிப்பட்ட நிமிடங்களில் இங்குதான் இருந்தார் எம்ஜிஆர். போனில் தகவலை சொன்ன நாஞ்சில் மனோகரன், "இப்போ என்ன செய்யப் போறீங்க?" என்று பதற்றத்தோடு கேட்க, "பால் பாயாசம் சாப்பிட போகிறேன்" என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் எம்ஜிஆர். புதிய கட்சி என்ற முடிவை எடுத்ததும் இதே ஸ்டுடியோவில் வைத்துதான்.

மீனம்பாக்கம்-

அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் இருந்து சிங்கம் போல் துள்ளிக்குதித்து சென்னை வந்த புரட்சித்தலைவர், விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து தன்னை பார்க்க துடித்த லட்சோப லட்சம் மக்களுக்கு தரிசனம் கொடுத்தது இங்கேதான். பின்பு இது திரையரங்குகளில் நியூஸ் ரீலாக காண்பிக்கப்பட்டது. இந்த ஒளிச்சுருளுக்கு பின்னணி பேசியவர் எம்.என்.ராஜம். அவர் பேசிய ஒரு வாசகம் இன்னும் நெஞ்சுக்குள் அப்படியே...

"எம்.ஜி.ஆர், நலமா என்று மக்களை பார்த்து கேட்கிறார். அதற்கு மக்கள், தலைவா... உன் அகம் நலம் என்றால், தென்னகம் நலம்தானய்யா என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.... !"

விஜய் ரசிகனின் விஜய் பாட்டு...


“நான் அடிச்சா தாங்க மாட்ட... நாலு நாளு தூங்க மாட்ட...” இந்த பாடல்தான் விஜய் ரசிகர்களின் அன்றாட ஆலாபனை ஆகியிருக்கிறது. இதில் இன்னும் ஒரு ஸ்பெஷல், அவரது மகன் சஞ்சய் ஆடியிருப்பதுதான்! விஜய்க்காக சங்கர் மகாதேவன் குரல் கொடுத்திருக்கிறார். சஞ்சய்க்கு குரல் கொடுத்திருப்பது, சஞ்சயை போன்ற குட்டிப் பையனான அஸ்வத் பி.அஜீத்.

இவரது குடும்பமே இசைக்குடும்பம் என்பதுதான் முக்கியமான செய்தி. அப்பா அஜீத் டிரம் இசைக்கலைஞர். அம்மா வினிதா பாடகி. (ஆனந்த தாண்டவம் படத்தில் வரும் கனாக் காண்கிறேன் கனாக் காண்கிறேன் கண்ணாளனே... இவரது வாய்ஸ்தான்)

மலை‌யா‌ளத்‌தி‌ல்‌‌ ஜெய்‌சூ‌ரி‌யா‌ நடி‌த்‌த "கரன்‌சி‌" படத்‌தி‌ல்‌ சி‌த்‌தா‌ர்‌த்‌ இசை‌யி‌ல்‌ ஒரு பா‌டலை‌ பா‌டி‌னே‌ன்‌. அப்‌பு‌றம்‌ போ‌பி‌ அம்‌பர்‌லா‌ வி‌ளம்‌பர படத்‌தி‌ல்‌ ஒரு சி‌ன்‌ன குரல்‌ கொ‌டுத்‌தே‌ன்‌. அதை‌ கவனி‌த்‌த ஜே‌ம்‌ஸ்‌ வசந்‌தன்‌ சா‌ர்‌, "பசங்‌க" படத்‌தி‌ல்‌ "அன்‌பா‌லே‌ அழகா‌கும்‌ வீ‌டு... " பா‌டலி‌ல்‌ பா‌லமுரளி‌கி‌ருஷ்‌ணா‌ சா‌ருடன்‌ சே‌ர்‌ந்‌து பா‌டுகி‌ற வா‌ய்‌ப்‌பை‌ கொ‌டுத்‌த தோ‌டு, அந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ இடம்‌ பெ‌ற்‌ற பசங்‌க கெ‌ளபா‌ய்‌ ஸ்‌டை‌லி‌ல்‌ ‌ ஆடுவா‌ங்‌களே‌ அந்‌த " கூ..ஈஸ்‌த..." என்‌கி‌ற பா‌டலுக்‌கும்‌, "இறை‌வா‌ இறை‌வா‌... உன்‌ அன்‌பை‌தா‌ன்‌ கே‌ட்‌கி‌றே‌ன்‌.." என்‌கி‌ற பா‌டலுக்‌கும்‌ என மூ‌ன்‌று வா‌ய்‌ப்‌பு‌களை‌ கொ‌டுத்‌தா‌ர்‌ ஜே‌ம்‌ஸ்‌ வசந்‌தன்‌ சா‌ர்‌. அவருக்கு என் நன்றி என்கிறார் இந்த குட்டிப் பையன்.

இப்‌போ‌து நா‌ன்‌ ஆறா‌ம்‌ வகுப்‌பு‌ படி‌க்‌கி‌றே‌ன்‌. பி‌யா‌னோ‌வி‌ல்‌ செ‌கண்‌ட்‌ கி‌ரே‌டு பா‌ஸ்‌ பண்‌ணி‌யி‌ருக்‌கே‌ன்‌. என்‌னோ‌ட குரு டே‌னி‌யல்‌ சா‌ர்‌. அவர்‌ எம்‌‌.எஸ்‌.வி‌. சா‌ர்‌ இசை‌க்‌குழுவி‌ல்‌ இருந்‌தவர்‌. அவரி‌டம்‌ வா‌ய்‌ப்‌பு‌ கி‌டை‌த்‌தது என்‌ பா‌க்‌கி‌யம்‌ என்கிற அஜீத், விஜய் ஆன்ட்டனியுடன் இணைந்தது எப்படி?

ஐடி‌யல்‌ பனி‌யன்‌ சி‌ங்‌கி‌ள்‌ஸ்‌ குரலுக்‌கு நா‌ன்‌ பே‌சி‌யி‌ருந்‌தே‌ன்‌. அதற்‌கு வி‌ஜய்‌ஆண்‌டனி‌ சா‌ர்‌தா‌ன்‌ இசை‌. அவர்‌தா‌ன்‌ அந்‌த வா‌ய்‌ப்‌பை‌ கொ‌டுத்‌து பே‌ச வை‌த்‌தா‌ர்‌. அவருடை‌ய இசை‌யி‌ல்‌ எங்‌க அம்‌மா‌ வி‌னி‌தா‌ "பந்‌தயம்"‌ படத்‌தி‌ல்‌ ஒரு பா‌டலை‌ பா‌டி‌யி‌ருந்‌தா‌ங்‌க. அப்‌போ‌தி‌லி‌ருந்‌து என்‌னை‌ப்‌ பற்‌றி‌ அவருக்‌கு தெ‌ரி‌யு‌ம்‌. வா‌ய்‌ப்‌பு‌ வரும்‌ போ‌து அழை‌க்‌கி‌றே‌ன்‌ என்‌று சொ‌ன்‌னவர்‌ சொ‌ன்‌ன மா‌தி‌ரி‌யே‌ "வே‌ட்‌டை‌க்‌கா‌ரன்"‌ படத்‌தி‌ற்‌கு இந்‌த "நா‌ன்‌ அடி‌ச்‌சா‌ தா‌ங்‌க மா‌ட்‌ட.. நா‌லு நா‌ளு தூ‌ங்‌க மா‌ட்‌டே‌... மோ‌தி‌ப்‌பா‌ரு... வீ‌டு போ‌யி‌ சே‌ரமா‌ட்‌டே‌.." என்‌கி‌ற வரி‌களை‌ பா‌டுவதற்‌கு வா‌ய்‌ப்‌பு‌ தந்‌தா‌ர்‌.

உற்சாகமாக தனது சினிமா வாய்ப்புகள் பற்றி சொல்லும் அஸ்வத் பி.அஜீத், இன்னும் சில படங்களில் பாடிக் கொண்டிருக்கிறாராம். எல்லா குட்டீஸ்களை போலவே இவரும் ஒரு விஜய் ரசிகர்!

சக ஹீரோக்கள் முகத்தில் விளக்கெண்ணை பூசிய நடிகை!


பரத் முகத்தில் வெளக்கெண்ணை! தடவியிருப்பவர் பூனம் பாஜ்வா. தமிழில் நடிச்சது இரண்டே படம்தான். இப்போதான் மூணு, நாலுன்னு எண்ணிக்கை ஏறிகிட்டு இருக்கு. அதுக்குள்ளே விமர்சனம். அதுவும் கூட நடித்த ஹீரோக்கள் பற்றி.

“என்னுடன் நடிச்ச ஹீரோக்களில் அதிக ஸ்கிரிப்ட் நாலெட்ஜ் ஜீவாவுக்குதான் இருக்கு” என்று பகிரங்க பேட்டி கொடுத்திருக்கிறார் பூனம் பாஜ்வா. சேவல் படத்தில் நடித்த பரத், தம்பிக்கோட்டை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நரேன் போன்ற நாயகர்களுக்கு இன்னும் சேதி போகவில்லை போலிருக்கிறது.

தம்பிக்கோட்டை படத்தில் ப்ளஸ் டூ மாணவியாக நடிக்கிறார் பூனம் பாஜ்வா. காலேஜ் படிக்கிற வயசிலே ப்ளஸ் டூவான்னு யாரும் கேட்டுவிட கூடாது என்பதற்காக ரெண்டு வருஷம் பெயிலாக்கிடுங்களேன் என்றாராம் டைரக்டரிடம். (இப்படி லாஜிக்கை விடாம பிடிச்சுக்கிற வித்தையை ஜீவாவிடம் கற்றுக் கொண்டாரோ என்னவோ?) பூனம் சொன்னால் வேணாம்னு சொல்ற தைரியம் யாருக்கு இருக்கு? பூனம் இப்போ பெயில் ஸ்டூடண்ட்!

தமிழ்சினிமாவில் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ என்கிற ஒரு வார்த்தையை மதிக்காத நடிகையும் நானேதான் என்று பெருமை பேசுது பொண்ணு. அது நெசம்தானாங்கிற ஆராய்ச்சி நமக்கெதுக்கு? நம்பிட்டுதான் போவோமே!

நயன்தாராவுக்கு நாமம்? போட்டியில் இறங்கிய த்ரிஷா




வேட்டையாடு விளையாடு, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன் இப்படி நான்கு தொடர் ஹிட் கொடுத்த லேட்டஸ்ட் நாயகன் கமல்! இவரைப்போலவே தொடர் ஹிட் பார்ட்டி நம்ம தனுஷ். பொல்லாதவன், திருவிளையாடல், படிக்காதவன், யாரடி நீ மோகினி! இதுதான் தனுஷின் ஹாட் லிஸ்ட்.

ஒரு ஹிட் கொடுத்தாலே ஒரு கோடியை ஏற்றிக் கொடுக்கும் தமிழ்சினிமாவில், இந்த தொடர்ஹிட் இருவரையும் ராசாதி ராசாவாக்கியிருக்கிறது. இவர்களுடன் ஜோடி சேர ஒரே போட்டா போட்டி. அதிலும், கமலை விட வயதில் மிக மிக சிறியவரான தனுஷிடம் ஜோடி போட கெஞ்சும் அதே நடிகைகள், கமலுடனும் ஜோடி போட அலைவதுதான் கனவுலகத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதிலும் நயன்தாராவுக்கும் தமன்னாவுக்கும் மறுபடியும் ஒரு நேரடி போட்டி. குருவியில் துவங்கிய இந்த போட்டி, இப்போது கமலிடமும் தொடர்வதுதான் லேட்டஸ்ட் லடாய். மர்மயோகியில் விட்டதை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது என்ற முயற்சியில் இறங்கிவிட்டாராம் த்ரிஷா. இந்திக்கு போய் விட்டாலும், நாற்பதே நாளில் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.

தனக்காக நாற்பது நாட்கள் பொறுத்திருக்க சொல்கிறாராம். கே.எஸ்.ரவிகுமார், கமல் இருவரும் பொறுத்திருந்தால் நயன்தாராவுக்கு வழக்கம் போல நாமம்தான்!